விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக கட்சியின் சார்பாக 2026 சட்டமன்ற தேர்தல் களப்பணிகள் குறித்தான கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அதிமுக மேற்கு மாவட்ட தலையகத்தில் முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சில் அதிமுக கட்சியை சார்ந்த விருதுநகர் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் பிற அணி சார்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி…
2026 சட்மன்ற தேர்தலில் அனைத்து நிர்வாகிகளும் ஒன்றுபட்டு அதிமுக கட்சி வெற்றி பெற பெருமூச்சடன் செயல்பட வேண்டும் என்றார்.
2026 தேர்தலில் திமுக கட்சி உறுதியாக தோல்வியடைந்து திமுக கட்சி வீட்டுக்கு சென்று விடும், அதிமுக கட்சி தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடியார் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்று கூறினார்.
மேலும் அதிமுக கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகள் அதிமுக கட்சிகாரன் தான் என்று கட்சி வேலைகள் செய்யாமல் இருந்தால் கட்சியில் இருந்து கண்டிப்பாக நீக்கப்படுவார்கள் என தலைமை கூறியதாக கூறினார்..
40 ஆண்டுகள் அறிமுக கட்சி உழைத்தாலும், தற்போது கட்சிக்காக வேலையில் தீவிரம் காட்ட வேண்டும் என்றும், இல்லையெனில் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் எனக் கூறினார்.

மேலும் 2026 தேர்தலில் திமுக கட்சி கண்டிப்பாக தோற்கடிப்படும் எனக் கூறினார்.
அதிமுக கட்சி சில காலம் ஒன்றுபடாமல் சீராக இல்லாமல் இருந்தது என்றும், தற்போது அதனை எடப்பாடியார் சீர்படுத்தி கட்டுப் கோப்பில் வைத்துள்ளார் என தெரிவித்தார்.
மேலும் அதிமுக கூட்டணியானது பாஜகவுடன் சரியான கூட்டணியாக உள்ளது என்றும், பாஜக கட்சி பழைய மாதிரியான கட்சி கிடையாது என்றும், அதே போன்று தான் அதிமுக கட்சியும் என கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.











; ?>)
; ?>)
; ?>)