மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களான மருது சகோதரர்களின் 224 வது குருபூஜை விழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஓ ஆலங்குளம் பகுதியில் உள்ள மருது சகோதரர்களின் சிலைக்கு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

தொடர்ந்து மருது சகோதரர்களின் ஆலங்குளம் பகுதி சங்க நிர்வாகிகள் கோரிக்கையை ஏற்று 2026 அதிமுக ஆட்சி வந்த உடன் நிச்சயமாக இந்த மருது சகோதரர்களின் சிலையை வெண்கல சிலையாக அமைத்து தரப்படும் என உறுதி அளித்தால் அதைத் தொடர்ந்து அருகே உள்ள பெரிய ஆலங்குளம் பகுதியில் உள்ள மருது சகோதரரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து அப்பகுதியில் உள்ள மருது சகோதரர்களின் சிலைக்கு மணிமண்டபம் அமைத்து தரப்படும் என உத்தரவாதம் அளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ் ஒன்றிய செயலாளர்கள் நிலையூர் முருகன், பார்த்திபன், கோட்டை காளை எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.














; ?>)
; ?>)
; ?>)