கோவை கோவைபுதூர் ரோட்டரி கிளப் சார்பில் போலியோ விழிப்புணர்வு கார் ஊர்வலம் கோவைபுதூர் ஏ கிரவுண்ட் பகுதியில் துவங்கியது. முன்னாள் அமைச்சர் வேலுமணி ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.

20க்கும் மேற்பட்ட கார்களின் ஊர்வலம் ஐயப்பன் கோவில், பஸ் திருப்பம் உள்ளிட்ட பகுதிகள் வழியே மீண்டும் கிரவுண்டை வந்தடைந்தது. கோவைபுதூர் ரோட்டரி கிளப் தலைவர் குருபிரசாத் கூறுகையில்,” ஆண்டுதோறும் அக். 24ம் தேதி சர்வதேச போலியோ நோய் ஒழிப்பு விழிப்புணர்வு தினமாக ரோட்டரி சங்கத்தால் கடைபிடிக்கப்படுகிறது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்நிகழ்ச்சி ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது,” என்றார். இத்திட்டத்தின் மாவட்ட தலைவர் சீனிவாஸ் ஸ்ரீராமன், துணை கவர்னர் ஜெயகாந்தன், கோவைபுதூர் கிளையின் செயலாளர் ராம்பிரசாத்,திட்ட தலைவர் சரிதா உள்பட பலர் பங்கேற்றனர்.













; ?>)
; ?>)
; ?>)