தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது இந்த நிலையில் வடக்கிழக்கு பருவமழையும் தொடங்கியுள்ள நிலையில் நேற்று இரவு தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் ஒட்டியுள்ள பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மாவட்டத்திலுள்ள நீர்நிலைகளுக்கு கூடுதலான நீர் வரத்து வந்து கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் வைகை அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
முல்லைப் பெரியாறு அணை, வருசநாடு மலைத்தொடர், மற்றும் கொட்டக்குடி ஆற்றுப்பகுதிகளில் இருந்து வரும் நீர் குன்னூர் வைகை ஆற்று வழியாக வைகை அணைக்கு செல்கிறது.

இதனால் வைகை அணைக்கு வரும் நீர்வரத்து 2268 கனஅடியிலிருந்து தற்போது 12 ஆயிரத்து 589 கன அடியாக உயர்ந்துள்ளது.
இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து அதன் முழு உயரமான 71 அடியில் 62.66 அடியை எட்டியுள்ளது.
அணையில் இருந்து திறந்து விடப்படும் நீர் அளவு 1199 கனியாக இருக்கின்றது அணையின் இருப்பு 4,132 மில்லி கன அடியாக இருக்கின்றது.
மேலும் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அர்ப்பணித்து வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் இதனால் கரையோர வசிக்கும் பொது மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ந்து உயர்ந்து கொண்டு வரும் வைகை அணையின் நீர்மட்டத்தால் பாசனப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளன.