கோவை மாநகராட்சி 22 வது வார்டு விளாங்குறிச்சி செல்லும் பிரதான சாலையில் உதயா நகர், ஜீவா நகர், சாவித்திரி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ளன. 3,000 க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

பாதாள சாக்கடைக் குழாய் பதிக்க தோண்டப்பட்ட சாலை குண்டும், குழியுமாக இருக்கிறது. களிமண் பூமியாக இருப்பதால், சமீபத்தில் பெய்த மழையில் சேரும், சகதியும் ஆகி மாறிவிட்டது.
எந்த வாகனத்திலும் செல்ல முடியாத அளவுக்கு படும் மோசமான வாகனங்களில் செல்போர்கள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.

குழந்தைகள் பள்ளிகளுக்குச் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது 2023 சாலை தோண்டப்பட்டது. ஒரு வேலையை செய்தால், சரியாக மூடுவதில்லை இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னமும் சாலை மோசமாக இருக்கிறது.
சாலைத் தோண்டி வேலை செய்தால் சரியாக மூட வேண்டும். இருசக்கர வாகனங்களில் செல்வோரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை, கால் டாக்ஸியை அழைத்தால் உதயா நகருக்கா எனக் கேட்டு வர மறுக்கின்றனர். ஸ்மார்ட் சிட்டி என்கின்றார்கள், ஆனால் எவ்வித வசதியும் செய்து கொடுக்கவில்லை. குறுகிய வீதிகள் எதுவும் சரியில்லை, தெரு விளக்குகள் வசதி இல்லை, திடீரென யாருக்காவது உடல் நலம் பாதிக்கப்பட்டால் ஆம்புலன்ஸ் வருவதற்கு கூட சாலை சரியாக இல்லை, பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதற்கு பெண்கள் அவதி அடைகின்றனர். உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மனுக்கள் கொடுத்ததாகவும், அனைத்து விதமான வரி இனங்கள் செலுத்துவதாகவும், பல தடவை முறையிட்டு விட்டதாகவும், போராட்டம் செய்யும் அளவுக்கு தள்ளி விட்டார்கள் என்றும் வேதனை தெரிவித்தனர் அப்பகுதி மக்கள் .