மதுரை தனக்கன்குளம் பகுதியில் தனது குடும்பத்தினரோடு வசித்து வருபவர் நகைச்சுவை நடிகர் மதுரை முத்து கொரோனா காலம் தொட்டு தான் வாழக்கூடிய பகுதிகளில் நடுத்தர மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ஆதரவற்ற மாணவர்கள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்

இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இன்று தனது வீட்டின் அருகே தனது மணைவி மற்றும் மகன் மகளோடு இணைந்து சுமார் 100 நபர்களுக்கு புத்தாடை மற்றும் பட்டாசுகள் உள்ளிட்டவைகளை வழங்கினார்
குறிப்பாக மாணவர்களின் எதிர்காலம் கருதி அவர்களுக்கு பயிலக்கூடிய வகையில் நன்னெறி கதைகள் விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய கதைகள் அடங்கிய புத்தகங்களை தீபாவளி பரிசாக அவர்களுக்கு வழங்கினார்
முன்னதாக இந்த நிகழ்வுக்கு வருகை தந்த முதியவர்கள் மற்றும் பெண்களுக்கு தேநீர் மற்றும் ஸ்னாக்ஸ் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன

தொடர்ந்து மதுரை முத்து பேசுகையில் எத்தனையோ குடும்பங்களில் தீபாவளி பண்டிகை என்பது புத்தாடைகள் கூட எடுக்க முடியாமல் சிரமப்பட்டு இருக்கிறார்கள் நான் வாழ்ந்த கிராமத்தில் கூட இன்றளவும் அந்த நிலை இருக்கத்தான் செய்கிறது அதை கருத்தில் கொண்டு நான் தற்போது வசிக்கக்கூடிய இந்த பகுதியைச் சேர்ந்த ஆதரவற்ற மற்றும் மிகவும் நலிந்த நிலையில் இருப்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தீபாவளியின் போது அவர்கள் புத்தாடை உடுத்தக்கூடிய வகையில் சேலை பட்டாசு உள்ளிட்டவைகளை வழங்கி இருக்கின்றோம்.

அதேபோன்று மாணவ மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்கியதோடு மட்டுமல்லாது இதை பார்க்கக் கூடியவர்களும் தங்களால் முயன்றளவு தீபாவளி திருநாள் என்று தாங்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் நலிந்த நிலையில் இருப்பவர்களுக்கும் ஆதரவற்ற நிலையில் இருப்பவர்களுக்கும் உதவிகள் செய்ய வேண்டும் என்பதை எனது வேண்டுகோளாக கேட்டுக்கொள்கிறேன் என்றார்
மனிதநேயத்தோடு தனது பிறந்த நாள் மற்றும் பொங்கல் இப்படியாக ஒவ்வொரு விழாக்களின் போதும் தான் வசிக்கக்கூடிய பகுதி மக்களுக்கு தொடர்ந்து மதுரை முத்து நலத்திட்ட உதவிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.