• Fri. Jan 16th, 2026
[smartslider3 slider="9"] Read Now

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் குடும்பத்துடன் சந்தித்து தான் கட்டிய கோவில் திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுத்தார்.

நேற்று முன்தினம் ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் குடும்பத்துடன் நம்பெருமாள் உற்சவர், தாயார் சன்னதிக்கு சென்று தரிசனம் செய்தார்.

இந்நிலையில், நேற்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இல்லத்துக்கு தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் குடும்பத்தினருடன் சென்றார். அவர்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவரது மகனும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வரவேற்று பேசினர்.

ஹைதராபாத் அருகே கட்டப்பட்ட லட்சுமி நரசிம்ம சாமி கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அழைப்பு விடுத்தார்.