வலங்கைமான் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில், திருவாரூர் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் ஹக்கீம் பாட்ஷா அறிவுறுத்தலின்படி, விபத்தில்லா தீபாவளி மற்றும் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 11 மற்றும் 12 அக்டோபர் 2025 தேதிகளில்” வாருங்கள் கற்றுக் கொள்வோம் என்று தலைப்பில் பொதுமக்களுக்காக செயல்முறை விளக்கமாக தொழுவூரில் உள்ள தீயணைப்பு துறை நிலைய வளாகத்தில் நடைபெற்றது. வலங்கைமான் தீயணைப்புத் துறை நிலை அலுவலர் மீ. பார்த்திபன் தெரிவித்ததாவது :-

வலங்கைமானில் 25 பட்டாசு கடைகள் நிரந்தர அனுமதி பெற்றுள்ளன. தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 30 கடைகள் தற்காலிக அனுமதி பெற்றுள்ளன. பட்டாசு கடைகளுக்கு டிஆர்ஓ அனுமதி பெற வேண்டும். வெடிக்கடையை சுற்றி 10 அடி இடைவெளி விட வேண்டும். ஒவ்வொரு கடைக்கும் இடையே 50 அடி இடைவெளி விட வேண்டும். வெடிக்கடையின் பின்பக்கத்தில் அவசர வழி இருக்க வேண்டும். கடையின் மேல் பகுதியில் இபி, hd லைன்கள் செல்லக்கூடாது.

மேலும் பள்ளி, கல்லூரி வளாகத்தில் இருந்து 150 அடிக்குப் பிறகு கடைகள் அமைக்க வேண்டும். மேலும் பொதுமக்கள் பாம்பு வருவதற்கான வழிகளை ஏற்படுத்தி விடுகின்றனர். வீட்டின் சமையலறை மற்றும் பின்புற பகுதிகளில் உணவுக் கழிவுகள் சுத்தம் செய்யாத காரணத்தால் அந்த உணவுகளை தேடி எலிகள் வருகின்றன. எலிகளைத் தேடி பாம்புகள் வீட்டுக்கு வருகின்றன. எனவே சமையலறை மற்றும் வீட்டின் பின்புற பகுதிகளை சுத்தமாக வைத்திருந்தால் பாம்புகள் வருவதை தவிர்க்கலாம். மேலும் பாம்புகள் வீட்டிற்கு வந்தால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தீயணைப்பு வண்டியில் 5500 லிட்டர் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் தீ விபத்தில் பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு அதிநவீன மூச்சுக் கருவிகள் உள்ளன. அதேபோல் அதிநவீன தீ கவசங்கள் உள்ளது. எனவே தீபாவளியை பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாட தீயணைப்புத் துறையின் சார்பில் பொதுமக்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்.