விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதையும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதையும், ஏற்றுமதியை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டு திண்டுக்கல் – குமுளி தேசிய நெடுஞ்சாலையில் உணவு பூங்கா திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த உணவு பூங்காவில் உணவுப் பொருட்களை சேமித்து வைக்க 15,000 மெட்ரிக் டன் கிட்டங்கி, பழவகைகளை சேமித்து வைக்க 1,000 மெட்ரிக் டன் குளிர்சாதன கிட்டங்கி, பழங்களை பழுக்க வைப்பதற்கு 110 மெட்ரிக் டன் கூடம் அமைக்கப்பட உள்ளது.
இந்த உணவு பூங்காவிற்கு, முல்லைப் பெரியாற்றிலிருந்து (கிணறு மற்றும் இயல்பு நீர் சேகரிப்புத் தொட்டி மூலம்) பிரதான குழாய் வழியாக சிப்காட் தொழில் வளாகத்தில் ரூ.42.39 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு தினசரி 5.00 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலமாக 5.86 ஏக்கர் நிலப்பரப்பில் துணைமின்நிலையம் அமைத்து, 110/22KV மின்சாரம் விநியோகிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், சாலை வசதி, தெரு விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த உணவு பூங்கா, விவசாயிகளுக்கு ஒரு மாற்று சந்தையை உருவாக்கி, அவர்களின் பொருட்களை நேரடியாக விற்பனை செய்யவும், பதப்படுத்தவும் உதவும். இதன் மூலம் சுமார் 4,000 நபர்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள்.
இந்நிகழ்வில் சிப்காட் செயற்பொறியாளர் (தெற்கு மண்டலம்) செல்வி கவிதா, திட்ட அலுவலர் திரு.சித்திரைவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.