மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செட்டியபட்டியில் எட்டு ஊர் இளைஞர் குழுவின் சார்பில் செட்டியபட்டி மற்றும் குன்னத்துப்பட்டி கிராமத்தின் மயான பகுதியில் 100 பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.,

தொடர்ந்து மதுரை தேனி நெடுஞ்சாலையில் உள்ள ஆண்டிபட்டி கனவாய் அருகில் ரயில்வே பகுதி, மாதா கோவில் பகுதிகளில் நெகிழிப் பைகளை அகற்றி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு மஞ்சள் பைகளை வழங்கி நெகிழிப் பைகளை தவிர்த்து மஞ்சள் பைகளை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.,
இதற்கு பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் இளைஞர் குழுவினரை பாராட்டி வருகின்றனர்.,