தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் விபத்தில்லா தீபாவளி மற்றும் மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் தற்காத்துக் கொள்வது பற்றிய விழிப்புணர்வு, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி தமிழக அமைப்புசாரா சிறு குரு வியாபாரிகள் தொழிற்சங்க மாநில அமைப்பாளர் லட்சுமணன் தலைமையில் நடைபெற்றது.

இதில் விபத்து ஏற்படாமல் எப்படி பட்டாசு வெடிப்பது என்பது பற்றியும், மழை வெள்ளங்களில் வெள்ள பாதிப்பிலிருந்து எப்படி தற்காத்துக் கொள்வது என்பது பற்றியும் தீயணைப்பு வீரர்கள், பள்ளி மாணவ மாணவியர்கள் இடத்தில் விளக்கி பேசினர். அதனைத் தொடர்ந்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தொடர்ந்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தீயணைப்பு நிலைய வீரர்கள், பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.