தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றியம், திருச்சிற்றம்பலம் ஊராட்சியில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டம், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) செல்வேந்திரன் தலைமை வகித்தார்.
பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். உதவித் திட்ட அலுவலர்கள் நாராயணன் (ஊதியம் மற்றும் வேலை வாய்ப்பு), சீனிவாசன் (மகளிர் திட்டம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். பற்றாளர் எம்.சிவகுமார் தீர்மானங்கள் வாசித்தார்.

கிராம மக்களின் அத்தியாவசியமான தேவைகளை தேர்வு செய்து, கிராமசபை ஒப்புதல் பெறப்பட்டது. சாதிப் பெயர்கள் கொண்ட குக்கிராமங்கள் சாலைகள் மற்றும் தெருக்கள் பெயரை மாற்றுதல் குறித்தும், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதில், திமுக தஞ்சை தெற்கு மாவட்ட அவைத்தலைவர் சுப.சேகர், பேராவூரணி வடக்கு ஒன்றியச் செயலாளர் கோ.இளங்கோவன், இள.அரசு, கதிரேசன், செந்தில், ஏ.சி.சி.மாரிமுத்து, சண்முகநாதன், சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக, வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) கலியபெருமாள் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற கிராம சபைக் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டது. ஏற்பாடுகளை, ஊராட்சி செயலர் தென்கோவன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.