• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஒரத்தநாடு அருகே மின்சாரம் தாக்கி முதியவர் பலி..,

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே மின்சாரம் தாக்கி முதியவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது ஒரத்தநாடு பகுதியில் நேற்று மாலை திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

இதில் நேற்று இரவு ஒரத்தநாடு அருகே உள்ள மூர்த்திஅம்பாள்புரம், தெற்குகாடு கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ராஜேந்திரன், வயது 64, என்பவர் தனது வீட்டின் அருகில் மாட்டு கொட்டகையில் கட்டப்பட்டிருந்த மாடுகளுக்கு தீவனம் வைக்க சென்றபோது அப்போது அங்கு கொட்டகையில் இரும்பு கம்பி ராஜேந்திரன், தொட்டதாக கூறப்படுகிறது இதில் ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக ராஜேந்திரன் மீது மின்சாரம் தாக்கியது இதில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த ஒரத்தநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த ராஜேந்திரனை, மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலத்த காற்றுடன் பெய்த மழையில் மின்சாரம் தாக்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.