தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவி நேற்று ஒரத்தநாட்டில் தனியார் பள்ளி நடைபெற்ற அரசு திறனாய்வு போட்டி தேர்விற்கு தேர்வு எழுத வந்துவிட்டு மீண்டும் தேர்வு முடிந்து தனது சொந்த கிராமத்திற்கு பட்டுக்கோட்டையில் இருந்து ஒரத்தநாட்டிற்கு வரும் அரசு பேருந்தில் நேற்று மதியம் வீட்டிற்கு திரும்பச் சென்ற பொழுது அந்த பேருந்தில் கண்டக்டராக பணியாற்றும் பாபநாசம் தாலுகா நரியனூர் கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் வயது 47 என்பவர் அந்த பேருந்தில் சென்ற பள்ளி மாணவிக்கு பாலியல் ரீதியான துன்புரத்தில் கொடுத்ததாக பாதிக்கப்பட்ட மாணவி ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகார் அடிப்படையில் பெண்களுக்கு எதிரான போக்ஸோ சட்டத்தில்வழக்கு பதிவு செய்து ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசார் கண்டக்டர் சுதாகரை கைது செய்து ஒரத்தநாடு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.