திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பாரதிய ஜனதா கட்சியின் புதிய 7 அணிகளுக்கான அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் நாகேந்திரன், தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் , கேடி ராகவன் ,மாநில இளைஞரணி தலைவர் எஸ் ஜி சூர்யா மாநில மாநில தலைவி கவிதா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் தற்போது செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நைனா நாகேந்திரன் தெரிவித்ததாவது:-

தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா யாரை சொல்கிறாரோ அவருக்கு ஆதரவு தெரிவிப்போம் என்று சொன்ன டிடிவி தினகரன் தற்போது மாற்றி பேசுகிறார் என்றால் நீங்கள் அதை அவரிடம் தான் கேட்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் கூறினார்.
