விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியம் ராமு தேவன்பட்டி கிராமத்தில் பூத்து கமிட்டி நிர்வாகிகள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து பயிற்சி கூட்டம் நடைபெற்றது.
விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.
கழக அம்மா பேரவை இணை செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான
ராஜவர்மன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான சுப்பிரமணியன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் வரவேற்று பேசினார்.
இராமநாதபுரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நாகராஜன் ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். முன்னதாக முன்னாள் சபாநாயகர் காளிமுத்து நினைவிடத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
கூட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் பேசியது
மக்களால் நான் மக்களுக்காக நான் என்ற கொள்கையுடன் வாழ்ந்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் அவர்களது வழியில் ஆட்சி செய்த எடப்பாடியார் சிறப்பாக ஆட்சி நடத்தினார்.
திராவிட மாடல் ஆட்சி என்ற பெயரில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பு கிடையாது. விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மது கடைகளை குறைப்போம் என்று சொன்னவர்கள் தற்போது 24 மணி நேரமும் மது விற்பனை செய்து தமிழகத்தை போதை மாநிலமாக மாற்ற முயற்சி செய்து வருகின்றனர்.
மகளிருக்கான இலவச பஸ் என கொடுத்து பெண்களை பொது இடங்களில் அமைச்சர்கள் கேவலமாக பேசி வருகின்றனர். அதனை ஸ்டாலின் தடுக்காமல் வேடிக்கை பார்க்கிறார்.
தமிழகத்தில் தற்போது பொம்மை ஆட்சி தான் நடைபெற்று வருகிறது.
வரும் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் மரண அடி கொடுப்பார்கள் என கூறினார்.
கூட்டத்தில் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.