கரூர் பசுபதீஸ்வரர் கோயிலுக்கு புதன்கிழமை காலை சுவாமி வழிபட வந்த அவர், செய்தியாளர்களிடம் மேலும் கூறுகையில், தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோயில்களின் சொத்துக்களை காப்பாற்ற சுமார் 20 ஆண்டுகளாக போராடி வருகிறோம். அடுத்தடுத்து ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும் உயர்நீதிமன்றத்தை நாடி தொடர்ந்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு கோயில் சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

மேலும் அரசாங்கமும், அதிகாரிகளும் கோயில் சொத்துக்களை பாதுகாக்கக்கூடிய நிலையில் உள்ளவர்கள். ஆளும் அரசோ, அமைச்சர்களோ, அரசின் பின்புலம் கொண்டவர்களோ, பணபலம் கொண்டவர்களோ அரசின் விதிமுறைகளுக்கு எதிராக, தவறாக வழிநடத்தினாலும் கூட சட்டத்தை சீர்தூக்கி ஆராய்ந்து அதை தடுக்கும் பொறுப்பு அரசு அலுவலர்களுக்கு உண்டு. ஆனால் தற்போது வேலியே பயிரை மேய்ந்த கதைபோல ஒரு சட்ட விரோத பெருந்துயர் திருக்கோயில் சொத்துக்களுக்கு விளைந்துள்ளது. திருக்கோயில் சொத்துக்களை பத்திரப்பதிவு செய்வதில் இருந்து தடைசெய்வதை திருக்கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

இதுவரை சொத்துக்கள் பாராதீணம் செய்வதை தடுக்கப்பட பூஜ்ய மதிப்பில் பத்திரப்பதிவு நடைமுறை உள்ளது. ஆனால் கடந்த 30}ம்தேதி அரசு பிறப்பித்த சட்ட விரோத அரசாணையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் கோயில் நிலங்கள் பத்திரப்பதிவு செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த மாதிரியான அரசாணை பிறப்பிக்க அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. மேலும் இந்திய அரசியல் நிர்ணய சட்டத்திற்கு எதிரானது. சட்ப்படியும் இந்த அரசாணை நிலைக்காது. இதனை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம். மேலும் இந்த சட்டத்திற்கு எதிராக அரசாணையை ரத்து செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முகமதியர் காலத்திற்கு பின்பும், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கூட சில கோயில் இடங்கள் காப்பாற்றப்பட்டன. ஆனால் இப்போது திருக்கோயில் சொத்துக்களுக்கு பெருந்துயரம் ஏற்பட்டுள்ளது. திருக்கோயில்களுக்கு பல்வேறு வகையான நிலங்கள் உள்ளன. இதில் குறிப்பிட்ட ஊழியத்தின் பேரில் கோயில் விழாக்கள் கொண்டாட, கோயில் பராமரிக்க முன்னோர்களால் எழுதி வைக்கப்பட்ட நிலறங்களை எந்தநோக்கத்துடன் எழுதி வைக்கப்பட்டதோ, அதற்குத்தான் பயன்படுத்த வேண்டும். அறநிலையத்துறை சட்டப்பிரிவு 109}ன்கீழ் கோயில் சொத்துக்களை மீட்டெடுக்க எந்த கால வரம்பும் கிடையாது. அரசுத்தான் கோயில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும்.
பன்முக ஆளுமைத்திறன் கொண்ட கலைஞரின் ஆட்சியில் கூட பல்வேறு கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டன. காப்பாற்றப்பட்டன. ஆக்கிரமிப்பாளர்கள் முறைப்படுத்தப்பட்டு அவர்களுடன் இணக்கமான சூழல் ஏற்பட்டு கோயில்களுக்குரிய வருவாய் கிடைத்தது. ஆனால் இன்று அந்த வாய்ப்பு கூட பறிபோயிடும் நிலை உள்ளது. ஆக மொத்தம் திருக்கோயில் நில ஆக்கிரமிப்பாளர்கள் அரசின் பின்னணியில் இருந்து மறைமுகமாக இயக்குகிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது என்றார் அவர்.