கரூர் வேலுச்சாமி புரத்தில் கடந்த 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக மூச்சு திணறி 41 நபர்கள் உயிரிழந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அனைவரும் வீடு திரும்பி உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று கரூர் மாவட்டத்தில் உயிரிழந்த 33 குடும்பத்தினரை தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகர் விஜய் அவர்கள் வீடியோ கால் மூலம் ஆறுதல் கூறியுள்ளதாகவும் விரைவில் தங்களை சந்திக்க இருப்பதாகவும் இந்த சம்பவம் குறித்து கரூரில் இரண்டு நாட்களாக முகாமிட்டுள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் கரூர் தனியார் உணவகத்தில் பேட்டி அளித்துள்ளார்.

அதை தொடர்ந்து இன்று கரூர் மாவட்டத்தை தாண்டி உள்ள சில குடும்பத்திற்கும் தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் வீடியோ கால் மூலம் பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.