தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான காய்கறி வார சந்தையை ஏலம் விடுவதற்காக ஒப்பந்த புள்ளி கோரப்பட்டது.

இந்த நிலையில் ஆண்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் எட்வின் ஜோஸ், பேரூராட்சி தலைவர் சந்திரகலா முன்னிலையில் ஒப்பந்த புள்ளி கோரப்பட்ட பெட்டி இன்று திறக்கப்பட்டது
அதில் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே வார சந்தையை ஏலம் எடுப்பதற்காக ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு இருந்தார்.
இதனால் எதிர்த்து ஏலம் எடுப்பதற்கு போதிய ஒப்பந்ததாரர்கள் இல்லாததால் தேதி குறிப்பிடாமல் ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.

உசிலம்பட்டியைச் சேர்ந்த நபர் 25 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய்க்கு வாரச்சந்தையை ஏலம் எடுப்பதற்காக ஒப்பந்த புள்ளி முன் வைத்திருந்த நிலையில்.
வேறு யாரும் ஏலம் எடுக்காத காரணத்தால் தேதி குறிப்பிடாமல் ஏலம் ஒத்திவைக்கப்பட்டது
இதில் பேரூராட்சி தலைவர், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர், ஆண்டிப்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.