சிறப்பாக பணிபுரியும் ரயில்வே ஊழியர்களுக்கு தெற்கு ரயில்வே மண்டல அளவில் வருடந்தோறும் விஷிஸ்ட் ரயில் சேவா புரஸ்கார் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருதுகளை சென்னையில் நடந்த விழாவில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் வழங்கினார்.

இதில் மதுரை கோட்டத்தைச் சேர்ந்த 11 ரயில்வே அலுவலர்கள் விருது பெற்றுள்ளனர். காரைக்குடி உதவி கோட்ட பொறியாளர் வி.விவேகானந்தன், கணக்கியல் உதவியாளர் ஜி. எஸ். காயத்ரி, முதன்மை ரயில் என்ஜின் ஆய்வாளர் ஜே. சுரேஷ், வரைபடப் பிரிவு பொறியாளர் யூ. கார்த்திகேயன், ரயில் பாதை பராமரிப்பு பொறியாளர்கள் ஆர். எஸ். குமார் மற்றும் டி.ஜே. பால யுகேஷ், ரயில் பெட்டி பராமரிப்பு பொறியாளர் எ. நயினார், ரயில்வே மருத்துவமனை மருந்தாளர் எஸ். கணேசன், ரயில் இயக்க கட்டுப்பாட்டு அலுவலர் பி. ஜெய கணேஷ், பழனி ரயில்வே பாதுகாப்பு படை வீராங்கனை இ.தாமரைச்செல்வி ஆகியோர் பெற்றனர்.
மதுரை கோட்டம் ஊழியர் நலம், ரயில் நிலைய தூய்மை பராமரிப்பு போன்ற பிரிவுகளில் பகிர்வு சுழற் கேடயங்கள் பெற்றது. மேலும் மதுரை கோட்ட அலுவல் மொழித்துறை தனி சுழற் கேடயமும், பயணிகள் குறைகளை களைவதில் இரண்டாம் இடத்திற்கான சுழற்கேடயமும் பெற்றது.