மதுரை மாவட்டம் சாமநத்தம் அருகே புலியூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மடை கற்பனை சாமி திருக்கோவில் 47 ஆம் ஆண்டு உற்சவ விழாவை முன்னிட்டு மாபெரும் அசைவ அன்னதானம் நடைபெற்றது.

முன்னதாக கருப்பண்ணசாமிக்கு விசேஷ பூஜைகளும் தீபாராதனைகளும் நடைபெற்றன.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை சாமியாடி முருகன் பூசாரி மாயாண்டி நாட்டாமை ஆறுமுகம் தலைமையில் விழா குழுவினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
