விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு ராஜபாளையம் வனத் துறை சோதனை சாவடியில் இருந்து முடங்கியார் வரை மோட்டார் சைக்கிள் மூலம் பத்து கிலோமீட்டர் சென்று திரும்பிய இரு சக்கர வாகன பேரணியில் வனத்தை பாதுகாப்பது, வனவிலங்குகளை பாதுகாப்பது குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கியும், பதாகைகள் ஏந்தியும் சென்றனர்.

உதவி வன பாதுகாவலர் தங்கப்பழம் பேரணியை தொடங்கி வைத்தார். வன உயிரியியலாளர் பார்த்திபன் பேரணியை முடித்து வைத்தார். ஏற்பாடுகளை ராஜபாளையம் ஆன சரக அலுவலர் சரண்யா தலைமையில் வன ஊழியர்கள் வன அலுவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.