21அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் (TACBEA) மற்றும் ஓய்வூப் பெற்ற பணியாளர்கள் சங்கத்தினர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், தாயுமானவர் திட்டத்திலுள்ள சிரமங்களை களைவேண்டும். தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் பணிபுரியும் அனைவருக்கும் 20 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். 2021 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஓய்வு பெற்ற பணியாளர்கள் அனைவருக்கும் உடனடியாக ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
2021 ஆண்டுக்கு முன்னர் ஓய்வு பெற்ற பணியாளர்கள் அனைவருக்கும் கருணை ஓய்வூதியமாக ரூ.5,000 வழங்க வேண்டும். தேவையற்ற இடங்களில் முதல்வர் மருந்தகம் ஏற்படுத்தி தினசரி ரூ.1,000 விற்பனை செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பெ.ரவிச்சந்திரன், செயலாளர் பா.சக்திவேல்,தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்கத்தின் கௌரவத் தலைவர் ஜெயராமன் ஆகியோர் தலைமை வகித்தனர்.சங்கத்தின் அரியலூர் மாவட்ட பொருளாளர் ஆர் இளவரசு ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் அரியலூர் மாவட்ட துணை தலைவர்கள் சு.பால முருகன், எம் மணிகண்டன், மாவட்ட இணை செயலாளர்கள் சி பாலு, க.லதா, ஓய்வுப் பெற்ற பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் புலிகேசி, கண்ணையன், தமிழ்மணி,ஜெயராமன்,முத்துசாமி,நல்ல தம்பி,செல்வமணி செல்வமணி, கலியமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.