மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட 59 வார்டு எல்லிஸ் நகர் பகுதியில் தொடர்ந்து வருட கணக்கில் தெருவிளக்கு எரியவில்லை என்றும் இதை பயன்படுத்தி மர்ம கும்பல் செயின் பறிப்பு இருசக்கர வாகனம் திருட்டு நடைபெறுவதாகவும் இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் பாம்பு கடித்து பசுமாடு இறந்ததாகவும், இதனால் இப்பகுதியில் சிறு குழந்தைகள் பொது மக்கள் இரவு நேரத்தில் வீட்டிலிருந்து வெளியே வருவதற்கு கூட மிகவும் அச்சமாக இருப்பதாகவும், இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரி வார்டு கவுன்சிலர் அவர்களிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் குற்றசாட்டை முன்வைத்து எல்லிஸ் நகர் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு இப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தகவல் அறிந்த எஸ் எஸ் காலனி காவல் ஆய்வாளர் மோகன் தலைமையில் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்து. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் அப்போது பொதுமக்களிடம் கனிவாக பேசிய காவல் ஆய்வாளர்
பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது தீர்வாகாது மக்களுக்காக தான் காவல்துறை இருக்கின்றது. எதுவாக இருந்தாலும் 100க்கு போன் செய்யுங்கள் உடனடியாக காவல்துறை வருவார்கள் உடனடியாக உங்கள் பிரச்சினையை தீர்த்து வைக்கப்படும். உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் போராட்டம் வன்முறை தீர்வாகாது பேசி தீர்க்க முடியாத பிரச்சினை எதுவும் கிடையாது என அறிவுரை வழங்கினார்.

பின்பு சம்பந்தப்பட்ட மின்வரியத்துறை அதிகாரி மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவித்து உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு வரவழைத்து பழுதான மின்கம்பம் தெருவிளக்குகளை சரிபார்க்கும் பணியில் ஈடுபடுத்தினார் இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் கலைந்து சென்றன போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் கனிவாக காவல்துறை ஆய்வாளர் பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றது அனைவரும் கவனத்தை ஈர்த்தது.