இருசக்கர வாகனத்தில் போதையில் வந்த இரண்டு இளைஞர்கள் காரில் கைக் குழந்தையுடன் வந்த தம்பதியரை தாக்கினர்.
கன்னியாகுமரி மாவட்டம் புங்கறை பகுதியில் காரில் கைக் குழந்தையுடன் வந்த தம்பதியினரை தாக்கிய கும்பல். இரு சக்கர வாகனத்தில் வந்த போதை இளைஞர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தினர்.

பிறகு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அதை தடுத்து நிறுத்தி அனுப்பி வைத்தனர். போதை இளைஞர்கள் வந்த இரு சக்கர வாகனத்தின்,பதிவு எண் பகுதிக்கு கீழ் உள்ள பகுதியில் தமிழக முதல்வரின் படம் ஒட்டப்பட்டிருந்தது.சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் ஆன நிலையில், காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து,போதை இளைஞர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.