விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலையில்,
காரியாபட்டி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் வேங்கைமார்பன் ஏற்பாட்டில், காரியாபட்டி கிழக்கு ஒன்றிய கழக பூத் நிர்வாகிகளுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் தொடர்பான பயிற்சி கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர்கள் அரவிந்த், திலீப், கண்ணன், இராமநாதபுரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நாகராஜன், ராஜா உள்ளிட்டோர் ஆலோசனை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட கழக பொருளாளர் ஜெயபெருமாள் ஒன்றிய கழக கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் கிளைகழக செயலாளர்கள் பூத்கமிட்டி செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
