தஞ்சாவூா் மாவட்டம், தாராசுரம் பேட்டைத் தெருவைச் சோ்ந்தவா் காளிதாஸ், கூலித் தொழிலாளி. இவரது மகன் சிவபாலன் (12). அரசுப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா். வெள்ளிக்கிழமை மாலை தாராசுரத்தில் உள்ள அரசலாற்றில் நண்பா்களுடன் குளிக்க சென்ற இவா், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டாா்.
இந்நிலையில், சனிக்கிழமை தனியாா் கல்லூரி அருகே உள்ள கரையில் தீயணைப்பு மீட்பு படையினா் சிவபாலனின் சடலத்தை மீட்டனா்.
பின்னா் தாலுகா போலீஸாா், சடலத்தை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு ஒப்படைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.