விருதுநகர் தீ தடுப்பு உதவி மாவட்ட அலுவலர் தாமோதரன் தலைமையில் விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் தீ தடுப்பு குழுவினர் தீ விபத்துக்களை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

குறிப்பாக வீடுகளில் கேஸ் மூலம் ஏற்படும் தீயை எவ்வாறு கட்டுப்படுத்துவது, விபத்து காலங்களில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.
தொடர்ந்து தீயணைப்பு வீரர்களின் போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது