புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான ராதாபுரம் வெட்டுக்காடு புதுநகரை சேர்ந்தவர் பிரகாஷ், இவரது மகன் ஆகாஷ் (25) திருமணம் ஆகாத இவர், பூக்கடையில் பணிபுரிந்து வந்துள்ளார்.

மது பழக்கத்திற்கு ஆளான ஆகாஷ் தினந்தோறும் பணி முடித்துவிட்டு வீட்டிற்கு குடி போதையில் வருவதை வழக்கமாகவே வைத்துள்ளார். இதனை ஆகாஷின் பெற்றோர்கள் பலமுறை கண்டித்து உள்ளனர் ஆனாலும் ஆகாஷ் குடிப்பழக்கத்தை கைவிடவில்லை.
இதனால் மன உளைச்சலில் இருந்த ஆகாஷின் பெற்றோர்கள் மகனை பிரிந்து விழுப்புரத்தில் வாடகைக்கு குடியேறினர், மேலும் தன்னுடன் வந்து இருக்குமாறு தாய் தந்தையை ஆகாஷ் பலமுறை வற்புறுத்தியும் பெற்றோர்கள் அதை ஏற்கவில்லை.

இதனால் கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் காணப்பட்ட ஆகாஷ் நேற்று இரவு திருக்கனூர் காவல் நிலையம் பின்புறம் மது அருந்திவிட்டு பீர் பாட்டிலால் தனது கழுத்தையும் அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு,

வழக்கு பதிவு செய்த போலீசார் ஆகாஷ் தற்கொலை தான் செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணத்தால் அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.