தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, திருவோணம் ஒன்றியம் தளிகைவிடுதி சிவன் கோவில் வளாகத்தில், அக்கரைவட்டம், தளிகைவிடுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி தலைமை வகித்தார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் முன்னிலை வகித்தார். இதில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய நூற்றுக்கணக்கான மனுக்களை, கணினியில் பதிவு செய்து பொதுமக்கள் அரசு அலுவலர்களிடம் வழங்கினர்.
நிகழ்ச்சியில், திமுக தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.பழனிவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் கிருஷ்ணசாமி, திருவோணம் தெற்கு திமுக ஒன்றியச் செயலாளர் சோம.கண்ணப்பன், முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் செல்லம் சௌந்தரராஜன், திமுக ஒன்றிய அவைத் தலைவர் கோவிந்தராஜ், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் சங்கர், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் சாந்தி, திருவோணம் வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாமிநாதன், குமார் மற்றும் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ முகாம் நடைபெற்றது. மேலும், பயனாளிகளுக்கு நூறுநாள் வேலைத்திட்ட அடையாள அட்டை, கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், கால்நடைகளுக்கு தாது உப்பு வழங்கப்பட்டது.