வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை ஒட்டி பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் ஜி.என்.எஸ் ராஜசேகரன் தொகுதியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் வீடு வீடாக சென்று மக்களின் குறைகளை கேட்டு அறிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக திருநள்ளாறு பகுதியில் உள்ள சக்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்து தனது பிரச்சார பயணத்தை தொடங்கினார்.
திருநள்ளாறு தொகுதிக்கு உட்பட்ட கீழசுப்பராயபுரம் அக்கரைக்கோவில்பத்து பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று மக்களை சந்தித்து அவர்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை கேட்டு அறிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பகுதி மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்ததோடு அப்பகுதியின் நிறை குறைகளை அவரிடம் தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் ஜி.என்.எஸ் ராஜசேகரன் கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த போதிலும் தொடர்ந்து தொகுதியில் இருந்து மக்களுக்கு தேவையான அனைத்து பணிகளையும் செய்து வருவதாகவும் தற்போது தொகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வீடு வீடாக சென்று அவர்களின் குறைகளை கேட்டு அதற்கான ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தாமரை சின்னத்தை ஆதரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.