தூத்துக்குடியில் வீட்டில் நிறுத்தியிருந்த காருக்கு டோல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்து வாகன உரிமையாளருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி தமிழ்ச்சாலையைச் சேர்ந்த கைலாசம் என்பவர் கூறுகையில், எனக்கு இன்று அதிகாலை 4.13க்கு ஒரு எஸ்எம்எஸ் வந்தது. அதில் உங்களது வாகனம் (எண் xxxx) வாகைகுளம் டோல் கேட்டில் கடந்ததற்காக ரூ.80.00 எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இன்று காலையில் வீட்டில் கார் நிற்க எப்படி நமது காருக்கு டோல்கட்டணம் வசூலித்தனர் எனத் தெரியவில்லை. இதுகுறித்து டோல் பிளாசாவுக்கு போன் செய்தபோது அவர்கள் போனை எடுக்கவில்லை. எனவே, இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளதாக கைலாசம் தெரிவித்தார்.
