கோவை ப்ரோஜோன் மாலில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த விழாக்காலம் தொடங்கி விட்டது. மந்திர தீபாவளி ஒளி விழா 2025 கொண்டாட்டம், 19 நாட்கள் நடக்கிறது. ஒளிமயமான திருவிழாவில், பரவசமூட்டும் நிகழ்ச்சிகள், அனைத்து வயது வாடிக்கையாளர்களுக்கும் ஏற்ற சிறப்பு சலுகைகள் இடம் பெறுகின்றன.

முதல் முறையாக ப்ரோஜோன் மால் முழுவதும் ஒளி விளக்குகளால் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டு சொர்க்கமாக ஜொலிக்கிறது. கர்நாடகாவில் உள்ள மைசூர் தசரா பண்டிகை விழா அலங்கரிப்பாளர்கள் பங்கேற்று இதை காட்சிப்படுத்தியுள்ளனர். வாடிக்கையாளர்கள் நுழையும்போதே சொர்க்கத்திற்குள் நுழைந்த மகிழ்ச்சியை பெறுவதோடு என்றும் நீங்கா நினைவுகள் தரும் தீபாவளி சூழலை உணர முடியும்.
பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள், வாசகம் எழுதும் போட்டியில் பங்கேற்று, 35 லட்சம் ருபாய் வரையிலான பரிசுகளை அள்ளலாம். கார், யெஜ்டி ரோட்ஸ்டெர் பைக், தங்கம், வீட்டு உபயோக பொருட்கள், விடுமுறைக்கு வெளிநாட்டு சுற்றுலா, வார இறுதி நாள் வியப்புகள், உடனடி பரிசுகள், இலவச ஷாப்பிங் வாய்ப்பு உள்ளிட்ட வாடிக்கையாளர்களை பரவசமடையச் செய்யும் நிகழ்வுகள் காத்திருக்கின்றன.
ப்ரோஜோன் டைனோசர் உலகம் தமிழ்நாட்டில் முதல் முறை

அனைவரையும் கவரும் வகையில் ப்ரோஜோன் டைனோசர் உலகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மாபெரும் உள்ளரங்கு டைனோசர் உலகம் உருவாக்கப்பட்டு, தமிழ்நாட்டில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அசையும் டைனோசர்களை பார்க்கவும், விளையாட்டுக்களை காணவும், பல நேரடி செயல்முறைகளை செய்யவும் இது வாய்ப்பளிக்கிறது. சர்வதேச தரத்திலான இது போன்ற கவர்ச்சிகரமான நிகழ்வுகள் மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே வாடிக்கையாளர்களை மகிழ்வித்தது. தற்போது இங்குள்ள வாடிக்கையாளர்களும் கண்டுகளித்து மகிழ்ச்சி அடையலாம்.
இளம் வயதினரையும், விளையாட்டு ஆர்வலர்களையும் கவரும் சிரிக்க வைக்கும் விளையாட்டு அரங்கு, செயல்முறையில் உள்ளது. பரவசமடையச் செய்யும் விளையாட்டினை திறந்து, விளையாட்டு, சிரிப்பு மற்றும் நேரடியான சவால்களையும் சந்திக்கலாம்.
ப்ரோஜோன் மால், நள்ளிரவில் விற்பனை திருவிழாவை அக்டோபர் 18, 19 இருநாட்கள் நடத்துகிறது. நீட்டிக்கப்பட்ட ஷாப்பிங் நேரம், இலவச பார்க்கிங், ப்ரோஜோன் மாலில் உள்ள டைனோசர் பார்க்கிற்கு இலவச நுழைவு வசதிகள் என பல்வேறு கலவையான உலக அனுபவத்தை பெறலாம்.
ப்ரோஜோன் மையத்தின் தலைவர் திரு.அம்ரிக் பனேசர், செயல் இயக்க பிரிவு தலைவர் திரு.முசாம்மில், நிதி பிரிவு தலைவர் திரு. சிவக்குமார், தொழில்நுட்ப பிரிவு தலைவர் திரு. ஈஸ்வந்த் ராவ், சந்தை பிரிவு தலைவர் திரு. பிரிங்ஸ்டன் ஆகியோர் பேசுகையில், ப்ரோஜோன் மாலில் இந்த ஆண்டு பொருட்களை வாங்க வரும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவருக்கும் நினைவில் நீங்காத அனுபவங்கள் கிடைக்கும். வண்ணமயமான விளக்குகள், மாபெரும் போட்டிகள், தனித்துவமிக்க பொழுதுபோக்கு நிகழ்வுகள் போன்றவைகளை உணர முடியும். இந்த மந்திர தீபாவளி ஒளிநாள் விழா 2025 கொண்டாட்டத்தில், ஒரு கோடி பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கிறோம். கோவை நகரில் மாபெரும் கொண்டாட்டமாக இது இருக்கும். என்றனர்.