மதுரை அவனியாபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று தமிழ்நாடு அப்பளம், வடகம், மோர் வத்தல் தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர்கள் நலச்சங்கம் 13 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு உணவுப்பொருட்கள் தயாரிப்பாளர்கள் விற்பனையாளர்கள் கலந்து கொண்டு தங்களது தயாரிப்புகளை காட்சி படுத்தினர்.

தொடர்ந்து தமிழ்நாடு அப்பளம், வடகம், மோர் வத்தல் உணவுப் பொருள் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நல சங்க மாநிலத் தலைவர் திருமுருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது:
அப்பளம், வடகம், போன்ற உணவுப் பொருட்களை வெளிநாடுகளில் விற்பனை செய்வது குறித்தும் எங்களுக்கான மானியம் பெறுவது குறித்தும் முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசு சார்பாக 486 லட்சம் மதிப்பில் மானியத்துடன் முதன்முதலாக மதுரையில் கூட்டுத் தொழில் தொடங்க உள்ளோம். இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அரசு அதிகாரிகளுக்கு அரசுக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.

உணவுத்துறை அதிகாரிகள் நேரடியாக உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் போய் ஆய்வு செய்ய வேண்டும். சிறு கடைக்காரர்களை தொந்தரவு பண்ணி அவர்கள் மீது வழக்கு போட்டு தேவையில்லாத பிரச்சினை இதை தடுக்க வேண்டும் எடுத்தவுடன் வழக்க போட்டு தொழிலை நசுக்க கூடாது. உணவுப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி சதவீத குறைப்பு வரவேற்கத்தக்கது. ஆனாலும் உணவுப் பொருளின் மூலப்பொருள் ஜீரோ சதவீதமும் அதை பேக்கிங் செய்து விற்றால் அதற்கு ஐந்து சதவீதமும் உள்ளது. இந்த முரண்பாடுகள் எப்படி தவிர்க்கப்படபோது என்று தெரியவில்லை. 30 கிலோவுக்கு மேல் விற்பனை செய்யப்படுகின்ற உணவுப் பொருட்களுக்கு வரி கிடையாது.

ஆனால் ஒரு கிலோ விற்றால் வரி உண்டு. இது தொடர்பாக தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்கம் நிதி அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளோம் மூலப்பொருள் உணவுப் பொருட்களுக்கு ஒரே வரியை கொண்டு வர வேண்டும் உலகத்திலேயே முதன் முதலில் (shopping mall) மால் திறந்தது மதுரை மண்ணில் தான் புது மண்டபம் மால் ஆகத்தான் இருந்தது மதுரை சர்வதேச விமான நிலையம் என்று பெயருக்குத்தான் அறிவித்தார்கள் அதற்கான நிதி ஒதுக்கவில்லை என்றார்.