டாடா குழுமத்தின் ஒரு அங்கமான தனிஷ்க், இந்தியாவில் அதிக நம்பிக்கைக்குரிய ஆபரண பிராண்டாக திகழும் நிலையில் இந்நாட்டில் பழைய தங்க நகைகளை புதிய நகைகளாக மாற்றும் இந்நாட்டின் மிகப்பெரிய இயக்கத்தை தொடங்கி தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.
அனைத்து அம்சங்களிலும், நிலைகளிலும் சுயசார்பு என்ற இலக்கை நோக்கிய இந்தியாவின் இயக்கத்திற்கு ஆதரவளிப்பது இதன் நோக்கமாகும். இந்தியாவின் உண்மையான தங்க இருப்புகள், தங்கச் சுரங்கங்களில் இல்லை. மாறாக, நாடெங்கிலும் உள்ள இந்திய மக்களின் வீடுகளில் தான் அவைகள் இருக்கின்றன. இந்திய இல்லங்களில் மட்டும் 25,000 டன்கள் தங்கம் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கும் நிலையில் அந்த பிரமாண்டமான சொத்தும், வளமும் பெரும்பாலான நேரங்களில் வீடுகளுக்குள்ளேயே வேறு ஆதாயப்பலன்களை வழங்காமல் பூட்டி வைக்கப்பட்டிருக்கின்றன.

இதே நேரத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் தேவையில் ஏறக்குறைய 99% என்ற அளவிற்கு தங்கம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. சுயசார்பு என்ற நம் நாட்டின் குறிக்கோள் இலக்கை அடைவதற்கான பயணத்தின் வேகத்தை இந்த இறக்குமதி தங்கத்தின் மீதான சார்ந்திருப்பு மெதுவாக்குகிறது. இந்த முரண்பாடுக்கு தீர்வு காணும் விதத்தில் தங்களிடம் ஏற்கனவே இருக்கின்ற தங்க ஆபரணங்களின் மதிப்பை வெளிக்கொணருமாறு குடும்பங்களை தனிஷ்க் ஊக்குவிக்கிறது; பழைய தங்க நகைகளை புதிய, நவீன வடிவமைப்புகளாக மாற்றிக் கொள்வதன் மூலம் நம் நாடு தங்க இறக்குமதிக்காக பிற நாடுகளைச் சார்ந்திருக்கும் நிலையை குறைக்கிறது.
நாட்டின் நலன் சார்ந்த இந்த குறிக்கோளை வலுப்படுத்துவதற்காகவும், இந்த இயக்கத்தின் மைய மதிப்பீடுகளை முன்னிலைப்படுத்தவும் நம்பிக்கை, நேர்மை மற்றும் ஒருமைப்பாட்டுடன் ஒருங்கிணைத்துப் பார்க்கப்படுகின்ற பிரபல ஆளுமையான கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உடன் தனிஷ்க் இணைந்திருக்கிறது. 2025 அக்டோபர் 21-ம் தேதி வரை அனைத்து கேரடேஜ்களிலும் (S KT என்ற குறைந்த அளவு வரை) பழைய தங்க நகைகளை மாற்றும்போது பூஜ்ய (0%) பிடித்தம் என்ற சிறப்பு சலுகையை நுகர்வோர்களுக்காக தனிஷ்க் முதன் முறையாக வழங்குகிறது. தேச நலன் மீது அக்கறையுடன் சுயசார்பை ஆதரிக்கும் இந்த சிறப்பான முயற்சியில் ஒவ்வொரு இந்தியரும் பங்கேற்பதை இத்திட்டத்தின் மூலம்எளிதாக்கியிருக்கிறது.
கடந்த பல ஆண்டுகளாக, தனிஷ்க் – ன் தங்க பரிமாற்ற திட்டத்தில் 30 இலட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் பங்கேற்று ஏறக்குறைய 1.7 இலட்சம் கிலோ தங்கத்தை
மறுசுழற்சி செய்திருக்கின்றனர்.
.
டைடன் கம்பெனி லிமிடெட் ன் ஆபரண பிரிவின் தலைமை செயலாக்க அதிகாரி அஜாய் சாவ்லா கூறியதாவது “ஒரு குடும்பமானது. பூட்டப்பட்டு வைத்திருந்த ஒரு கிராம் தங்கத்தை மாற்றுகின்ற ஒவ்வொரு முறையும் தங்களுக்காசு அதிகரித்த மதிப்பை பெறுகின்றனர். அதுமட்டுமல்லாமல், தங்க இறக்குமதியின் அளவைக் குறைப்பதன் வழியாக தேசத்தின் நலனிற்கும், சுயசார்பிற்கும் பங்களிப்பை வழங்குகின்றனர். பழைய தங்க நகைகளை மாற்றுவதன் ஆற்றல் அபரிமிதமானது: தனிப்பட்ட மகிழ்ச்சியோடு, தேச நலனிற்கு ஆதரவளிக்கும் தாக்கமும் ஒன்றாக இதில் இணைந்திருக்கிறது. பல்வேறு வகை கேரட்டேஜ்களிலும் ($ KT போன்ற மிக குறைவானதிலும் கூட) இந்த பண்டிகை காலத்திற்காக முதன்முறையாக நாங்கள் வழங்கும் 0% பிடித்தம் என்ற சலுகைத் திட்டத்தின் மூலம் நமது நாட்டை சுயசார்புள்ளதாக மாற்றும் மகத்தான இலட்சிய திட்டத்தில் ஒவ்வொரு இந்தியரும் பங்கேற்பதை நாங்கள் மிக எளிதானதாக ஆக்குகிறோம் என்றார்.