அரியலூரில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாடிலுள்ள ஆலந்துறையார் கோதண்டராமசாமி கோயில் 82 ஆண்டுக ளுக்கு பிறகுதேரோட்ட விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.

தேரோட்டத்தையொட்டி இந்துசமயஅறநிலையத்துறை சார்பில் ரூ.15.50 லட்சம், பொதுமக்கள் சார்பில் ரூ.3.10 லட்சம் என மொத்தமாக ரூ.18.60 லட்சம் மதிப்பில் புதிய தேர் செய்யப்பட்டது. இதையடுத்துதேரோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.
தொடர்ந்து தேரோட்டத்தை யொட்டி செப்.23-ம் தேதிகொடியேற்றத்துடன் விழா தொடங்கி யது. தொடர்ந்து நாள்தோறும் இரவு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் ஶ்ரீ கோதண்டராமசாமி பெருமாள் எழுந்தருளி திருவீதியுலா நடைபெற்றது.
முக்கிய விழாவான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. தேரோட்டத்தில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி .சிவ சங்கர், மாவட்ட கலெக்டர் பொ.ரத்தின சாமி, சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, மாவட்ட காவல் கண்காணிப் பாளர் விஸ்வேஷ் பா.சாஸ்திரிஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, திருப்பணி குழுவினர் மற்றும் பொதுமக்களுடன் சேர்ந்து தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

தேர் தேரடியிலிருந்து புறப்பட்டு, மாதா கோயில், சத்திரம் வழியாக முக்கிய வீதிகளில் பயணித்து மீண்டும் தேரடியை வந்தடைந்தது. திருத்தேரில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீ கோதண்டராமசாமி பெருமாள் அலங்கார கோலத்தில் எழுந்தருளி, சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வருகை தந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விழாவில் இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் ஜோதி, உதவிஆணையர் (கூ பொ) லெட்சுமனன், கல்லங்குறிச்சி ஸ்ரீ கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோயில் ஆதீன பரம்பரை தர்மகர்த்தா கோ.வெங்கடஜலபதி, படையாச்சி ,அரியலூர் வருவாய் கோட்டாட் சியர் பிரேமி , நகர செயலாளர் இரா .முருகேசன், நகர்மன்ற தலைவர்.சாந்தி கலைவாணன், நகர் மன்ற துணை தலைவர் தங்க கலியமூர்த்தி , வட்டாட்சியர் முத்துலெட்சுமி,திருப்பணிக்குழு கமிட்டி ஏபிஎன் சுதாகர் , இராசி . செங்குட்வன், அ . இராமதாஸ் ,எஸ்சி எஸ் சீத்தாராம சுப்பிரமணியன்,எஸ் ஆர் ஸ்ரீதர், டி. செங்குட்டுவன்,இராம .மனோகரன், டி சத்தியமூர்த்தி, அ. கச்சியப்பசிவம், ஏ மணிவண்ணன்,எஸ் ஷங்கர்,எஸ் ஜெயராமன்,ஆர் ரங்கநாதன்,ஆர் சரவணன்,என் செல்வக்குமரன்,பி தண்டபாணி,எஸ் வெங்கடசன்,ஏ சுரேஷ் பாபு, ஜெமின் ஆர். வெங்க டேசன் , நகர திமுக பொருளாளர் மா. இராஜேந்திரன், இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் சதீஸ்குமார்,கோயில் செயல் அலுவலர் சரவணன், மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
