கன்னியாகுமரியில் தேசப்பிதா அண்ணல் காந்தியடிகள், பெரும் தலைவர் காமராஜரின் நினைவு இடங்களில் குமரி ஆட்சியர் அழகு மீனா. மலர் மாலை அணிவித்து மரியாதை. சூரிய கதிர்கள் அஸ்தி கட்டத்தை தொட்டு சென்றது.

காந்தி ஜெயந்தியும், பெரும் தலைவர் காமராஜரின் நினைவு தினமும் ஒரே நாளில் அமைந்துள்ளது இயற்கை செய்த விந்தையான அதிசயம்.
காந்தியடிகளின் அஸ்தி கடலில் கரைப்பதற்கு முன் வைக்கப்பட்டிருந்த இடத்தில்,காந்தியடிகளுக்கான நினைவு மண்டபத்தை அன்றைய கேரள மாநில அரசு. கேரள அரசின் தலைமை பொறியாளர் அலக்சாண்டர் வடிவமைத்த கட்டிட வடிவமைப்பு. இந்து கிறிஸ்தவ இஸ்லாமிய கோவில்களின் முகப்பு வடிவங்களை கொண்டதாக கட்டப்பட்டது மட்டும் அல்ல.

அண்ணல் காந்தி ஜெயந்தி அன்று மட்டும் சரியாக மதியம் 12_ மணிக்கு
சூரிய கதிர்கள். காந்தியின் ‘அஸ்தி’ கட்டத்தில் வட்ட வடிவ ஒளி தொட்டு செல்வது போல் காந்தி நினைவு மண்டபம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சூரிய கதிர்கள் அஸ்தி கட்டத்தை தொட்டுச் செல்வதை எல்லோரும் பார்க்க வசதியாக வெள்ளை துணியை அஸ்தி கட்டத்தின் மேல் விரித்து சூரிய ஒளி வட்டத்தை அனைவரும் காணும் சூழல்.

குமரி மாவட்டம் ஆட்சியர் அழகு மீனா, நாகர்கோவில் மாநகராட்சி மேயரும், குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் ஆன மகேஷ், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு, கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன்., தாமரை பாரதி, உட்பட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
ஆட்சியர் அழகு மீனா, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு, கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், தாமரை பாரதி, காந்தி மண்டபத்திற்கு அடுத்துள்ள பெரும் தலைவர் காமராஜரின் நினைவு மண்டபம் சென்று. பெரும் தலைவர் காமராஜரின் நினைவு நாளில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.
