குமரி மாவட்டம் பெருந்தலைவர் காமராஜர் ஐயாவின் உண்மை தொண்டர்,
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 98 வது பிறந்தநாளை முன்னிட்டு,
இன்று 01-10-2025 புதன்கிழமை நாகர்கோவில் வேப்பமூடு ஜங்சனில் பெருந்தலைவர் காமராஜர் சிலை அருகில் அமைக்கப்பட்ட நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களின் படத்திற்க்கு, நடிகர் பிரபு மன்ற மாவட்ட தலைவர் ஜெயபால் தலைமையில்
மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

பின்னர் ஏழை பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக, அகில இந்திய போலிங்பூத் காங்கிரஸ் மாநில தலைவர் வழக்கறிஞர் இராதாகிருஷ்ணன் குமரி கிழக்குமாவட்ட கலைபிரிவு மாவட்ட தலைவர் அலெக்ஸ், அகில இந்திய சிவாஜி மன்ற செயற்குழு உறுப்பினர் பிரசாத்,
காங்கிரஸ் கலைபிரிவு நாகர்கோவில் மாநகர மாவட்ட தலைவர் ராம்குமார்,
குமரிமாவட்ட சிவாஜி சமூகநல பேரவை மாவட்ட தலைவர் கண்ணன்,
இளங்கோ, ராஜபாண்டியன், ராஜதுரை, செல்வின், கண்ணன், சத்யன், பாபு பலவேசம், நாகராஜன் மற்றும் சிவாஜி&பிரபு ரசிகர்கள் கலந்து கொண்டதுடன்
உறுதிமொழியும் எடுத்தனர்.