தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் வட்டம் அனந்தகோபாலபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் சிறப்பாக நடைபெற்றது இதில் சுற்று புற தூய்மை பணி, பிளாஸ்டிக் இல்லா தமிழக உருவாக்குதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி, புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் 5ஆம் நாள் நிகழ்வில் பள்ளிக்கு அருகில் உள்ள குளக்கரையில் 250 க்கு மேற்பட்ட பனை, விதைகள் மாணவ, மாணவிகளால் நடப்பட்டது இதில் தஞ்சாவூர் மாவட்ட நாட்டு நல பணி திட்ட தொடர்பு அலுவலர் செல்வகுமார், பார்வையிட்டனர் மேலும் நாட்டு நலப்பணித் திட்ட திட்ட அலுவலர் சுதாகர், , பள்ளியின் முதுகலை தாவரவியல் ஆசிரியர் முத்துராஜ், , அனந்தகோபாலபுரம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்,