மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் இயங்கும் கல்வி குழுமப் பள்ளிகள், கல்வித் துறையில் அளிக்கும் சிறப்பான பங்களிப்பிற்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வழங்கிய மவுண்டன் மூவர்ஸ் என்ற பெருமைக்குரிய விருதைப் பெற்றுள்ளன. ஒன்பது மாவட்டங்களிலுள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இந்த விருது, கல்வித் திறனுக்கும் அர்ப்பணிப்பிற்குமான ஒரு முக்கியமான அங்கீகாரம் ஆகும்.

மதுரையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற கேம்பிரிட்ஜ் ஆண்டு மாநாட்டின் போது, கல்வி குழுமப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர் சர்மிளா மற்றும் ஆசிரியர்கள் ஹசீனா பார்வீன் மற்றும் காயத்ரி, கேம்பிரிட்ஜ் குழுவை பிரதிநிதித்துவப்படுத்திய கேவின் மற்றும் மனோஜ் ஆகியோரிடமிருந்து இவ்விருதைப் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் மனோஜ் பாஸ்கரன் (கீ அக்கவுண்ட் மேனேஜர், கேம்பிரிட்ஜ் தென் இந்தியா), கேவின் கோய்ன் (லீட் கீ அக்கவுண்ட் மேனேஜ்மென்ட், கேம்பிரிட்ஜ் தென் ஆசியா), முதல்வர் சர்மிளா, ஆசிரியர்கள் ஹசீனா பார்வீன், காயத்ரி (கல்வி குழுமப் பள்ளி)மற்றும் பலர் உடன் இருந்தனர்