கரூரில் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கோவை விமான நிலையம் வந்தனர்.

அவர்களை பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் மற்றும் பாஜக மாவட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்.
தற்போது சாலை மார்க்கமாக கரூர் சென்று கொண்டிருக்கின்றனர்.