கன்னியாகுமரி மாவட்ட மல்யுத்த சங்கம் சார்பில் பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி மைதானத்தில், மாநில அளவிலான பாரம்பரிய மல்யுத்த தொடர் போட்டி நடைபெற்றது.

இதில் 62 கிலோ எடை பிரிவில் மோதிக் கொண்ட சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்களான அசோக் பண்டாரி, நடராஜன் ஆகிய இணையின் இறுதி போட்டியை குமரி மாவட்ட முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார். அருகில் சர்வதேச மல்யுத்த நடுவர் லோகநாதன், குமரி மாவட்ட மல்யுத்த சங்க செயலாளர் ரஞ்சித், பயிற்சியாளர்கள் நிகேஷ், பொன் பார்த்த சாரதி, விழா ஒருங்கிணைப்பாளர் ராதாகிரு ஷ்ணன் உள்ளிட்டோர் உள்ளனர்.