கரூரில், தவெக பரப்புரை கூட்டத்தில், கூட்ட நெரிசலில், குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தது மிகவும் வேதனை அளிக்கிறது.
ஒரு அரசியல் கட்சியின் கூட்டத்திற்கு, எத்தனை பேர் வருவார்கள் என்பதை முறையாகக் கணக்கிட்டு, அதற்கேற்ப இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பதும், கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் பாதுகாப்புக்குத் தேவையான அளவு காவல்துறையினரை பணியமர்த்துவதும் காவல்துறையின் பொறுப்பு.
இது தமிழக காவல் உளவுத்துறையின் தோல்வி.

த வெ க பரப்புரை கூட்டத்தில், மின்சாரம் தடை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. இத்தனை கவனக்குறைவாகத் தமிழக அரசும், காவல்துறையும் செயல்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
வரும் காலங்களில் இது போன்று நடைபெறாமல் தடுப்பது அரசின் பொறுப்பு.
உயிரிழந்த 39 பேரின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம்.