கோவை, மாநகரின் முக்கிய மையப் பகுதியான டவுன்ஹால். இங்கு ஏராளமான ஜவுளிக் கடைகள், வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளன. நாள்தோறும் கோவை மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல், வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக் கணக்கான மக்களும் வந்து வீடுகளுக்கு தேவையான பொருள்கள், ஆடைகள் வாங்கிச் செல்வது வழக்கம். தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதாலும், அப்பகுதியில் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தற்பொழுது அதிக எண்ணிக்கையில் வர துவங்கி உள்ளனர்.

மேலும் இன்று விடுமுறை தினம் என்பதால், சற்று கூட்டம் அதிகமாக காணப்படும் இந்நிலையில் தற்பொழுது ஒப்பணக்கார வீதியில் உள்ள வணிக வளாகத்தில் சிம்கோ என்ற கடையின் மேல் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. உடனடியாக அங்கு இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் பேரில் உடனடியாக அங்கு சென்ற கோவை மத்திய தீயணைப்புத் துறையினர் தீயை ஆணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

விபத்து குறித்தான காரணம் தெரியவில்லை மேலும் தீயை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வந்து விசாரணைக்கு பின்னர் தீ விபத்துக்கான காரணம் தெரியவரும் என தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.
இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்து உள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவில் வருகிறது.
