• Sat. Sep 27th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

கிணற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவர் உயிரிழப்பு!!

ByKalamegam Viswanathan

Sep 27, 2025

மதுரை கிரைம் பிராஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் காதர் மைதீன் இவரது மகன் அபுதாகீர் (15). இவர் மதுரையிலுள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் இன்று மாலை தனது நண்பர்களுடன் சேர்ந்து அலங்காநல்லூர் அருகே உள்ள கோட்டைமேடு பகுதியிலுள்ள 70 அடி விவசாய கிணற்றில் குளிக்க சென்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அபுதாகீர் கிணற்றில் மூழ்கினார்.

நண்பர்கள் தேடியும் அபுதாகீர் கிடைக்காததால் இது குறித்து அலங்காநல்லூர் தீயணைப்புத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு துறையினர் சம்பவ இடம் விரைந்து கயிறு மற்றும் கொக்கிகள் மூலம் சுமார் 6 மணி நேரம் கிணற்றில் இறங்கி இறந்த மாணவர் அபுதாகீர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவன் இறப்பு குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.