விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சூரங்குடி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில்

வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகப்பிரியா தலைமை வகித்தார். சாத்தூர் தாசில்தார் ராஜாமணி முன்னிலை வகித்தார் ,சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், உள்ளிட்ட பல்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முகாமில் நடுச்சூரங்குடி, புதுச்சூரங்குடி, கண்மாய் சூரங்குடி, ஸ்ரீ ரங்காபுரம், கே. மீனாட்சிபுரம், உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மனுக்கள் வழங்கினர்கள்.

முகாமில் மொத்தம் 340 மனுக்கள் பெறப்பட்டன .அதில் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு 120 மனுக்கள், பட்டா மாறுதல் சம்பந்தமாக 58 மனுக்கள் ஊரக வளர்ச்சித் துறை மூலம் 30க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகப்பிரியா தெரிவித்தார்.
சாத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.