கன்னியாகுமரியில் உள்ள தூய அலங்கார உபகார மாதா திருத்தல தேவாலயம். தென் கோடி குமரி முனையில் அலைகள் வந்து இடைவிடாது கரையை முந்திச் செல்லும் கடற்கரை ஓரமாக. நீல வானை தொட முயலும் உயரமான கோபுரம் கொண்ட அழகே வடிவான கட்டிடக்கலையை கொண்டது.

குமரி வரும் சர்வதேச சுற்றுலா பயணிகள் வருகை தரும் ஒரு சுற்றுலா இடமாகவும் இந்த அழகிய ஆலயம் உள்ளது.
இவ்வாலயத்தின் தேதிப்படி திருவிழா கடந்த (செப்டம்பர் _24,25) தேதிகளில் நடைபெற்றது. நேற்று மாலை தேவாலய முற்றத்தில் இருந்து தொடங்கிய
நற்கருணை பவனி தேரோடும் வீதிகளில் வலம் வந்து, நிறைவாக. புனித அந்தோனியார் பள்ளி விளையாட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார பந்தலில்.
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் உபால்ட் மரியதாசன்,இணை பங்கு தந்தையர்கள் இணைந்து நற்கருணை நாதரை போற்றிப திருப்பலி நடைபெற்றது.

குமரி பங்கு மக்கள், 91அன்பியங்களை சேர்ந்த உறுப்பினர்கள், பக்த சபையின் அங்கத்தினர்கள் என பெரும் திரளான பக்தர்கள் நற்கருணை நாதரை வணங்கினர்.
தூய அலங்கார உபகார மாதா திருத்தல தேவாலய பங்குப் பேரவை துணைத் தலைவர்
டாலன்டிவோட்டா, செயலாளர் ஸ்டார்வின், பொருளாளர் டெனிஸ்டோ மற்றும் பங்கு பேரவை உறுப்பினர்கள் அனைத்து ஏற்பாடுகளை மேற்கொண்டு பங்கேற்றனர்.
தேவாலயம் கோபுரத்தில் மின்னிய பல வண்ண ஒளி கீற்றை, சாலையில் நடந்து சென்ற மக்கள் மட்டும் அல்லாது வாகனங்களை நிறுத்தி கோபுரத்தில் வண்ணத்தில் கண் சிமிட்டிய அலங்கார விளக்குகளின் மாறுபட்ட வண்ணங்களின் மாறுதலை கண்டு மகிழ்ந்து சென்றார்கள் .











; ?>)
; ?>)
; ?>)