• Wed. Sep 24th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

உதயநிதி கனிமவள கொள்ளை தடுத்து நிறுத்துவாரா? ஆர்.பி. உதயக்குமார்..,

ByKalamegam Viswanathan

Sep 24, 2025

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே திருமால் கிராமத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது வாழ்வாதாரமான விவசாய நிலங்களை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இக்கிராமத்தில் கிரஷர் குவாரி அமைப்பதற்கு அனுமதி பெற்று பணிகள் நடைபெற்று வருவதை ஒட்டி,நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கிராவல் மண் கடத்தப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதனைத் தொடர்ந்து கல்குவாரி விதிமுறை மீறி வைத்துள்ளதாகவும், இதனால் கிராமத்தில் உள்ள வீடுகள் விரிசல் ஏற்படுகிறது எனவும், கல்குவாரியிலிருந்து வெளியேறும் மண்துகள்கள் மற்றும் புகைகளால் வீடுகளில் முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு நோய்கள் வருவதால், தங்களது உயிருக்கு பாதுகாப்பின்மை ஏற்பட்டுள்ளது.

மேலும் விவசாய விளை நிலங்களும் , மண் துகள்களால் அழிந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரமான விளை நிலங்களை பாதுகாக்கவும், விவசாயிகளின் உயிர் காக்கவும் இந்த கல்குவாரி அனுமதியை ரத்து செய்ய கோரி, 200 – க்கும் மேற்பட்டோர் திருமால் கிராமத்தில் கருப்பு கொடி ஏற்றியும் கோஷங்கள் எழுப்பியும் காத்திருப்பு போராட்டத்தில். ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்திற்கு ஆதரவாக திருமால் கிராமத்திற்கு வந்த தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயக்குமார் அதிமுக நிர்வாகிகளுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். வருவாய் துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். பொதுமக்கள் தொடர்ந்து குவாரியை மூடும் வரை போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார்

திருமங்கலம் சோழவந்தான் உசிலம்பட்டி உள்ளிட்ட தொகுதிகளில் தொடர்ந்து கனிம வள கொள்ளை நடைபெற்று வருகிறது.ஆய்வுக்காக மதுரை வந்துள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கனிம வள கொள்ளை குறித்து ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பாரா? கல்குவாரியால் தங்களது கிராமத்திற்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு ஆதரவாக நாங்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.மதுரை வந்துள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கனிமவள கொள்ளையில் ஈடுபட்டு வரும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பத்தாண்டு காலம் ஆட்சி பொறுப்பில் இருந்த நாங்களே சில கோரிக்கைகளை முன் வைக்கும் போது அதனை நிறைவேற்றாத இந்த அரசு சாமானிய மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என தெரிவித்தார் போராட்டத்தின் போது கள்ளிக்குடி வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் அன்னமுத்து மாவட்ட அவைத் தலைவர் முருகன் ஒன்றிய செயலாளர் அன்பழகன் வேப்பங்குளம் கண்ணன் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் தமிழழகன் மீனவர் அணி மாவட்ட செயலாளர் சரவண பாண்டியன் திருமங்கலம் முன்னாள் யூனியன் சேர்மன் லதா ஜெகன் மாவட்ட நிர்வாகிகள் சிவரக்கோட்டை ஆதிராஜா ஆண்டிச்சாமி சிவசக்தி உஷா சுந்தரம் பொதுக்குழு உறுப்பினர் சுமதி சாமிநாதன் உச்சப்பட்டி செல்வம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.