• Wed. Nov 12th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

அரியலூர் மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடும் விழா..,

ByT. Balasubramaniyam

Sep 24, 2025

அரியலூர் மாவட்டம், வாரணவாசி ஊராட்சியில், தமிழ்நாடு வனத்துறை, அரியலூர் வனக்கோட்டம் சார்பில் பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தினை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி, நாவல், வேம்பு ,புங்கன், உள்ளிட்ட 1500 மரக்கன்றுகள் நடும் விழாவினை, பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவியர்களுடன் இணைந்து துவக்கி வைத்து, மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

பின்னர், கடந்த ஆண்டுகளில் நடப்பட்ட மரக்கன்றுகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என்பது குறித்தும் பார்வையிட்டார். முன்னதாக பசுமை பள்ளி அளவில் நடத்தப்பட்ட வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். முடிவில் , விழாவில் பங்கேற்ற அனை வருக்கும் வன சரக அலுவலர் கே. ஆலயமணி நன்றி கூறினார்.

இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, மாவட்ட வன அலுவலர் த.இளங்கோவன், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் பிரேமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) பாலசுப்ரமணியன்,வாரணவாசி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கி. இராஜேந்திரன், அரியலுார் , செந்துறை வனசரக வனத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், சமூக காடுகள் மற்றும் விரிவாக்க வன சரக பணியாளர்கள், இதர அரசு அலுவலர்கள், சோலைவனம் அறக்கட்டளை நிர்வாகிகள் ,ஸ்வீட் டிரஸ்ட் அறக்கட்டளை நிர்வாகிகள், பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.