திருச்சி ஏர்போர்ட் காமராஜர் நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அங்காளஈஸ்வரி பீலிகான் முனீஸ்வரர் ஆலயத்தில் நிர்வாகிகள் நியமனம் ஒருதலைப்பட்சமாக நடைபெற்றுள்ளதாகவும், நிர்வாகம் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினால் அதில் தலையிடக்கூடாது.

பொதுமக்களை மிரட்டுவதாகவும், பொதுமக்களிடமிருந்து வசூல் செய்த பணத்தைக் கொண்டு கட்டப்பட்ட மண்டபத்தில் சுப நிகழ்வுகள் நடத்த அனுமதி மறுப்பதுடன், கோவில் பிரசாதம் வழங்குவதற்கும், உண்பதற்கும் மறுக்கப்பட்டு வெளியேற்றப்படுவதாகவும், பொதுமக்கள் முன்னிலையில் புதிதாக கோவில் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்க வலியுறுத்தி ஆலய பாதுகாப்பு கமிட்டி மற்றும் பொதுமக்கள் இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன், மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார்மனு அளித்தனர்.